இணைக்குறள் Inaikkural

தெள்ளிய தீந்தமிழ்க் கோவையைக் கோத்தேன்யான்வள்ளுவன் நற்றாள் பணிந்து

Preface

Inaikkural: Inai means more than one thing. One walks with you. Two become a pair and remain two. Two are linked and both are whole. Inaikkural does these things. It travels with Thirukkural and contemplates the world it sees through the lens of our world today.

It contains 1,330 couplets original to Inaikkural in Tamil, written in kural venba, the metre that the Thirukkural is in.

Allow me a brief preface about myself. Not autobiography, only what one needs to know. As long as I can remember I would space out during life. Sitting there, in the mundane. Where did we come from? What is death? Why does any of this matter? I read voraciously. I studied many traditions but never academically. I believed what I could verify. Logic. Experience. What I found living tested these things over and over. Eventually experience became this lens through which I viewed life. What you will read is life pushed through that lens onto the page.

I've long been bothered by one thing: how frequently we learn a teaching but fail to live up to its demands. Kind words but cruel actions. No disconnect felt between the two. How can that happen?

I began thinking of it like this. Someone figures out something true about living. They find a way to bottle that clear water. A story. A saying. A practice. The container serves a purpose. But what happens when it becomes more important than what it carries? Loved and curated while the water within grows stagnant. It becomes easy to stand beside it and never drink.

I wanted less between me and the water. I set out to find a form that was bare enough to contain an idea but rigorous enough that the idea could prove itself against it. What I was searching for had been around me my whole life: the Thirukkural. Two short lines. A rigid metre. Questions asked about this world. About life among other people. It lives in how we behave and what we do. I did not force it. I bent myself around it until it was shaped to accept what I needed to give.

The form doesn't stop there. There are 133 chapters. Ten verses each. Each verse can state a truth. But it takes ten to scrutinize it in turn from all angles. And the restrictions don't stop with structure. Kural venba is unforgiving with rules governing nearly every word break. It discarded hundreds of lines I liked. Decided they failed the test. The container was the first test. Everything that passed it I held up to another. Asking: was what I created true enough that it should be kept? Necessary to say?

This didn't begin with me. It began with the innumerable people who thought before me, both known and unknown. I am merely the vessel that these ideas flowed through. And what a vessel keeps and discards is the signature of that vessel. The questions are old. My choices are not. And the responsibility for those choices is mine alone.

I don't live that yet. I lose my temper. I hold on when I should give way. It was for me too that I created this book. I needed to read it.

So asks ordinary life, again and again. What to make of anger. Why envy hollows from within. What becomes of the body when it grows old. When it's better to give way. It asks these questions not from any one religion, nor to exclude any. Whatever you hold sacred, these questions are already yours.

English beside each verse is not meant to translate it. It is one way to read it, set down to help you start. There is more than one way to read each couplet. Read by a Tamil speaker, it will go another way. Read in a hundred years, it may reveal what I cannot see. The Tamil is the poem, in the form that was meant for it. These words were made for the ear. If there is a Tamil reader you know, ask them to read you one. How it sounds is what it means.

The book begins in awareness. From there it goes through the forces that make a life: desire, conscience, character, body, work, wealth, community. Then it turns inward to what binds two: affection, trust, intimacy, family, and what comes when those things end. Separation. Loss. What we leave unfinished. I did not bring it to a close at the end. Neither does life. You can start in the middle, or back to front. It can be read from start to finish, but you can open it wherever you like and it will receive you.

What I've taken from the Thirukkural is its form. It doesn't retell that work, it doesn't follow it verse by verse. We know of Thiruvalluvar by what he said, but he gave us as well the machine that stored and carried it: a technology of compression and force that could balance thousands of years of meaning in two lines. It will bear what we need to say today. This too was given to us by Tamil: its classical forms are still strong enough to bear new work.

Krishna

முன்னுரை

இணைக்குறள். இணை என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. உடன் நடப்பது இணை. எதிரே நின்று ஈடுகொடுப்பதும் இணைதான். இரண்டையும் பிணைத்து, ஒவ்வொன்றும் தனித்து நிற்க இடம் தருவதும் இணையே. திருக்குறளுக்கு இந்நூல் அப்படி ஓர் இணை. தொன்னூலின் அருகில் நின்று அதன் வடிவத்தைக் காக்கிறது. பார்வையை மட்டும் இன்றைய வாழ்வின் பக்கம் திருப்புகிறது.

இதில் 1,330 குறள்கள் உள்ளன. எல்லாமே திருக்குறள் பாடப்பட்ட அதே குறள் வெண்பாவில் அமைந்தவை.

படைத்தவனைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். முழு வாழ்க்கைக் கதை அல்ல, தேவையான அளவுக்கு மட்டும். சிறுவயதிலிருந்தே எதைச் செய்துகொண்டிருந்தாலும் மனம் நடுவில் எங்கோ போய்விடும். நாம் எங்கிருந்து வந்தோம்? மரணம் என்றால் என்ன? அப்புறம், இதெல்லாம் எதற்கு? பல மரபுகளையும் படித்தேன், அறிஞனாக அல்ல. நானே கண்டதையும், என் பகுத்தறிவையும், வாழ்க்கை கற்றுத்தந்ததையுமே நம்பினேன். ஆண்டுகள் செல்லச் செல்ல அதுவே என் பார்வையாயிற்று. அந்தப் பார்வைக்குக் கிடைத்த வடிவம் இந்நூல்.

நெடுநாளாக ஒரு முரண் என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது. நல்லுரையைக் கையில் ஏந்திக்கொண்டே அது சொல்லும் வழியை விட்டு எத்தனை முறை விலகிவிடுகிறோம். வாயில் கனிவும் கையில் கொடுமையும் இருந்தும், இரண்டுக்கும் உள்ள இடைவெளி நமக்கு உறைப்பதில்லை. இது எப்படி நிகழ்கிறது?

இதை நான் இப்படிப் பார்க்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய ஓர் உண்மையைக் கண்டவர் அதைப் பிறருக்குக் கொண்டுசேர்க்க ஒரு வழி தேடுகிறார். அந்த உண்மை தாகம் தீர்க்கும் நீர் எனக் கொள்வோம். கொண்டுசேர்க்கும் வழி கலசம் என்றும் வைத்துக்கொள்வோம். அந்தக் கலசம் கதையோ சொல்லோ வழக்கமோ, எதுவாகவும் இருக்கலாம். கலசம் நீரைக் கொண்டுசேர்க்கிறது. ஆனால் நாள் செல்லச் செல்ல நீரைவிடக் கலசமே பெரிதாகிவிடுகிறது. கலசத்தைக் கட்டிக் காக்கிறோம். நீரைத் தொடுவதே இல்லை. நீரின் அருகிலேயே வாழ்ந்துகொண்டு ஒரு மிடறுகூடப் பருகாமல் போய்விடுவது எளிதுதான்.

எனக்கும் நீருக்கும் இடையே உள்ள திரை விலக வேண்டும் என்று நினைத்தேன். ஓர் எண்ணத்தைச் சுருக்கமாகச் சுமக்கவும் கடுமையாகச் சோதிக்கவும் ஏற்ற ஒரு வடிவத்தைத் தேடினேன். என் வாழ்நாளெல்லாம் உடனிருந்த வடிவத்திலேயே நான் தேடியது கிடைத்தது. அது திருக்குறள். இரண்டே சிறிய அடிகள், கடுமையான யாப்பு. மண்ணில் மக்கள் நடுவே நின்று, நம் அன்றாடச் செயல்களின் வழியாகவே வாழ்க்கையைக் கேள்வி கேட்கிறது குறள். எனக்காக நான் அதன் வடிவத்தை வளைக்கவில்லை. அதற்கு நானே வளைந்து கொடுத்தேன். நான் சொல்ல வந்ததை அது தாங்கிக்கொண்டது.

அதன் அமைப்பையும் அப்படியே வைத்துக்கொண்டேன். 133 அதிகாரங்கள், அதிகாரத்துக்குப் பத்துக் குறள்கள். ஒரு குறள் ஒரு கருத்தை முன்வைக்கலாம். ஆனால் பத்துக் கோணங்களில் பார்த்தால்தான் அது முழுச் சோதனைக்கு நிற்கிறது. யாப்பு அலங்காரம் அல்ல. குறள் வெண்பா மன்னிக்காது. ஒவ்வொரு அசைக்கும் விதி உண்டு. அது ஏற்றுக்கொண்ட வரிகளைவிடத் தூக்கி எறிந்த வரிகளே பல மடங்கு. யாப்பு என்பது முதல் சோதனை மட்டும்தான். யாப்பைத் தாண்டி வந்த வரிகளையும் மீண்டும் சீர்தூக்கிப் பார்த்தேன், வைத்துக்கொள்ளத் தக்க உண்மையா, சொல்லியே ஆக வேண்டியதா என்று.

இந்நூலில் உள்ள மெய்யறிவு என்னிடமிருந்து தொடங்கவில்லை. எனக்கு முன் வாழ்ந்த எண்ணற்றோர் வார்த்தெடுத்த மெய்யறிவு அது. அவர்களில் பெயர் தெரிந்தவர்களும் உண்டு, தெரியாதவர்களும் உண்டு. அதை வடிகட்டி இங்கே தருபவன் மட்டுமே நான். ஒரு வடிகட்டியை அறிய, அது எதைத் தடுத்து வைத்துக்கொள்கிறது, எதை ஊடே விடுகிறது என்று பார்த்தால் போதும். இந்தப் பார்வை தொன்மையானது. ஆனால் எதை ஏற்றுக்கொள்வது என்று முடிவுசெய்தது நான்தான். அந்த முடிவுகளின் பொறுப்பும் என்னுடையதே.

இதில் சொன்னபடியெல்லாம் நான் இன்னும் வாழ்ந்துவிடவில்லை. சினம் இன்னும் வருகிறது. பற்றை விட நினைத்தாலும் மனம் விடுவதில்லை. இந்நூலின் முதல் வாசகன் நான்தான். முதல் மாணவனும் நான்தான். எனக்கும் இது தேவைப்பட்டது.

அன்றாட வாழ்க்கை சில கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கோபத்தை என்ன செய்வது? பொறாமை ஏன் உள்ளிருந்து அரிக்கிறது? மூப்படையும் உடலுக்கு என்ன ஆகிறது? எப்போது விட்டுக்கொடுப்பது சரி? இந்தக் கேள்விகள் எந்த மதத்துக்கும் சொந்தமில்லை. எந்த மதத்துக்கும் அன்னியமும் இல்லை. நீங்கள் எதைப் புனிதமாகக் கருதினாலும், இந்தக் கேள்விகள் உங்கள் வாழ்விலும் ஏற்கெனவே எழுந்திருக்கும்.

இத்தனை சுருக்கமான இரண்டு அடிகளுக்குள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அடங்கியிருக்கும். படிக்கும் நீங்கள் இதில் வேறொரு பொருளைக் காணலாம். பிற்காலத்தில் இதைப் படிப்பவர், நான் காணத் தவறிய ஒன்றையும் இதில் கண்டடையலாம். இந்தக் குறள்கள் வாய்விட்டுப் படித்துக் கேட்பதற்காகப் படைக்கப்பட்டவை. ஒன்றிரண்டு குறள்களையாவது உரக்கப் படித்துப் பாருங்கள். குறளின் பொருள் அதன் ஓசையிலும் இருக்கிறது.

இந்நூல் விழிப்புணர்வில் தொடங்குகிறது. அடுத்து, வேட்கை, மனசாட்சி, குணம், உடல், உழைப்பு, செல்வம், பிறரோடு கூடி வாழ்தல் என, ஒரு வாழ்வை உருவாக்கும் விசைகளைப் பற்றிப் பேசுகிறது. பின், பாசம், நம்பிக்கை, நெருக்கம், குடும்பம், பிரிவு, இழப்பு, முடிவுறாமல் எஞ்சி நிற்பவை என, நெருங்கிய உறவுகளின் பக்கம் திரும்புகிறது. இறுதியில் இதற்கு நான் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. வாழ்க்கையும் அப்படி முற்றுப்பெறுவதில்லையே. எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்குங்கள். வரிசையாகப் படிப்பதற்காகவே நூலை அமைத்தேன். ஆனால் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும், அது உங்களோடு பேசும்.

திருக்குறளிலிருந்து இந்நூல் பெற்றுக்கொண்டது அதன் வடிவம் மட்டுமே. இது மொழிபெயர்ப்போ, அதன் கருத்துகளை மறுபடி சொல்வதோ, குறளுக்குக் குறள் பின்பற்றி எழுதியதோ அல்ல. திருவள்ளுவர் சொன்ன கருத்துகளுக்காக அவரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால் சிந்தனையைச் செறிவாகச் சொல்ல அவர் உருவாக்கித் தந்த குறள் வடிவமும் அவரது பெருங்கொடைகளில் ஒன்று. சுருக்கமும், சமநிலையும், வீச்சும் கொண்ட அந்த வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. அதில் இன்றைய வாழ்வையும் சொல்ல முடிகிறது. தமிழின் பெருஞ்செல்வம் அதன் செவ்வியல் வடிவங்கள். புதிய படைப்புகளைத் தாங்கும் வலிமை அவற்றுக்கு இன்றும் உண்டு.

கிருஷ்ணா

Reading the transliteration

Under each couplet is its sound, spelled the way Tamil is commonly typed, line for line with the Tamil. Doubled vowels are long: aa, ee, oo. zh is the sound in Tamizh. th and dh are a soft t and d, said with the tongue at the teeth. Read it aloud: the sound is part of what the poem means.

How to readஎப்படிப் படிப்பது

  • Selected is one verse from each of the 133 chapters, chosen for what it has to say. Contents holds all 1,330, chapter by chapter.தேர்ந்தவை: 133 அதிகாரங்களிலிருந்தும் ஒவ்வொரு குறள், அது சொல்லும் கருத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பொருளடக்கம்: 1,330 குறள்களும், அதிகாரம் அதிகாரமாக.
  • Swipe left or right, or tap ‹ ›, to move through the collection you are reading.நீங்கள் படிக்கும் தொகுப்பில் முன்னும் பின்னும் செல்ல, இடமும் வலமும் தள்ளுங்கள், அல்லது ‹ › ஐத் தொடுங்கள்.
  • Random opens any verse in the collection, so the last chapters are as near as the first.ஏதேனும் தொகுப்பில் ஏதாவது ஒரு குறளைத் திறக்கும்; கடைசி அதிகாரங்களும் முதல் அதிகாரங்களைப் போல் அருகில்.
  • Swipe down to go back through the verses you have seen, up to come forward again. Past the newest, a swipe up brings a new verse at random.நீங்கள் பார்த்த குறள்களுக்குத் திரும்பிச் செல்ல கீழே தள்ளுங்கள்; மீண்டும் முன்னே வர மேலே. கடைசியாகப் பார்த்ததற்கு அப்பால் மேலே தள்ளினால், புதிய குறள் ஒன்று தானாக வரும்.
  • Saved → History lists every verse you have seen, newest first. Tap the heart to keep one you liked.சேமிப்பு → பார்த்தவை: நீங்கள் பார்த்த குறள்கள் அனைத்தும், புதியது முதலில். பிடித்த ஒன்றை வைத்துக்கொள்ள இதயத்தைத் தொடுங்கள்.
  • The heart saves a verse; the pencil adds your own note. Both stay on this device.இதயம் குறளைச் சேமிக்கும்; எழுதுகோல் உங்கள் குறிப்பைச் சேர்க்கும். இரண்டும் இந்தக் கருவியிலேயே இருக்கும்.
  • Share makes a picture of the verse to send.பகிர் குறளை ஒரு படமாக்கி அனுப்பத் தரும்.
  • Tap the chapter title at the top to go to any chapter; the magnifier searches the book.எந்த அதிகாரத்துக்கும் செல்ல மேலே உள்ள அதிகாரத் தலைப்பைத் தொடுங்கள்; பூதக்கண்ணாடி நூலில் தேடும்.
  • Write to the author from any verse. A reply appears in Saved, even without an email address.எந்தக் குறளிலிருந்தும் ஆசிரியருக்கு எழுதலாம். மின்னஞ்சல் தராவிட்டாலும் பதில் ‘சேமிப்பு’ பகுதியில் வரும்.
  • The site remembers where you were, in each tab and in your history, and brings you back there.ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் வரலாற்றிலும் நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்பதைத் தளம் நினைவில் வைத்து, அங்கேயே மீண்டும் கொண்டுவரும்.
  • On a keyboard: ← → for the collection, ↑ ↓ for your history, R for random, / to search.விசைப்பலகையில்: தொகுப்புக்கு ← →, வரலாற்றுக்கு ↑ ↓, ஏதேனும் ஒன்றுக்கு R, தேட /.

Share the bookநூலைப் பகிர

Use this to share the book with others: they point their phone's camera at the code and the site opens.

இந்நூலைப் பிறருடன் பகிர இதைப் பயன்படுத்துங்கள்: அவர்கள் தம் கைப்பேசிக் கேமராவை இக்குறியீட்டின் மேல் காட்டினால் தளம் திறக்கும்.

QR code for inaikkural.com
inaikkural.com

A verse a day: follow Inaikkural on WhatsApp or Telegram.

நாளும் ஒரு குறள்: வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் வழியாக இணைக்குறளைப் பின்தொடருங்கள்.

Your privacyஉங்கள் தனியுரிமை

This site uses no cookies and no outside trackers. To learn which verses people read and share, it counts, on its own server, how many times each verse is read, saved or shared each day. These are totals only: your address and anything that identifies your device are never stored, and nothing links one visit to another.

Once a day it also counts the broad shape of a visit, each as a separate total: the country (worked out from your device's time zone, not your address), the kind of device, the site that linked here, your languages, the hour, and whether you have been here before (a yes-or-no mark kept only on your device).

The verses you save and the notes you write stay on your device. If you sign in with your email, they are also kept on this site's own server, so they are there on all your devices; you can delete that account in Settings at any time. Searches are counted as words, without anything about who searched.

If you write to the author from a verse, your message is kept so it can be read, along with your email only if you give one. So that a reply can reach you without an email, your device keeps a private code for each message; the site uses it only to fetch the author's reply, and the server never learns who holds it.

இத்தளம் குக்கீகளையோ வெளிக் கண்காணிப்புக் கருவிகளையோ பயன்படுத்துவதில்லை. எந்தக் குறள்கள் படிக்கப்படுகின்றன, பகிரப்படுகின்றன என்று அறிய, ஒவ்வொரு குறளும் நாளொன்றுக்கு எத்தனை முறை படிக்கப்பட்டது, சேமிக்கப்பட்டது, பகிரப்பட்டது என்ற மொத்த எண்ணிக்கையை மட்டும் தன் சொந்தச் சேவையகத்தில் கணக்கிடுகிறது. உங்கள் முகவரியோ கருவியை அடையாளம் காட்டும் எதுவுமோ சேமிக்கப்படுவதில்லை; ஒரு வருகையை இன்னொன்றுடன் இணைப்பது எதுவும் இல்லை.

நாளொன்றுக்கு ஒருமுறை, ஒரு வருகையின் பொதுத் தன்மையையும் தனித்தனி மொத்தங்களாகக் கணக்கிடுகிறது: நாடு (உங்கள் முகவரியிலிருந்து அல்ல, கருவியின் நேர மண்டலத்திலிருந்து), கருவியின் வகை, இங்கே இணைப்புத் தந்த தளம், உங்கள் மொழிகள், நேரம், நீங்கள் முன்பு வந்திருக்கிறீர்களா என்பது (உங்கள் கருவியில் மட்டுமே இருக்கும் ஓர் ஆம்/இல்லை குறி).

நீங்கள் சேமிக்கும் குறள்களும் எழுதும் குறிப்புகளும் உங்கள் கருவியிலேயே இருக்கும். மின்னஞ்சலால் உள்நுழைந்தால், அவை உங்கள் எல்லாக் கருவிகளிலும் இருக்கும்படி இத்தளத்தின் சொந்தச் சேவையகத்திலும் வைக்கப்படும்; அந்தக் கணக்கை அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.

ஒரு குறளிலிருந்து ஆசிரியருக்கு எழுதினால், அது படிக்கப்படுவதற்காக வைக்கப்படும்; நீங்கள் மின்னஞ்சல் தந்தால் மட்டுமே அதுவும். மின்னஞ்சல் இல்லாமலே பதில் உங்களை அடைய, ஒவ்வொரு செய்திக்கும் ஒரு தனிக் குறியீட்டை உங்கள் கருவி வைத்துக்கொள்ளும்; பதிலைப் பெற மட்டுமே அது பயன்படும்.

The text here may still change. Readers' messages are read, and where one shows that a verse or its English can be better, it may be revised. இங்குள்ள பாடம் இன்னும் மாறலாம். வாசகர்களின் செய்திகள் படிக்கப்படுகின்றன; ஒரு குறளோ அதன் ஆங்கிலமோ இன்னும் சிறக்கலாம் என்று ஒருவர் காட்டினால், அது திருத்தப்படலாம்.

Inaikkural is a contemporary work of 1,330 original couplets in the classical Tamil kural metre. Thirukkural inspired the form. © 2026 Krishna. Write to contact@inaikkural.com. இணைக்குறள் என்பது தமிழ்க் குறள் யாப்பில் அமைந்த 1,330 புதிய குறள்களைக் கொண்ட நவீனப் படைப்பு. திருக்குறள் இதன் வடிவத்திற்கு உத்வேகமளித்தது. © 2026 கிருஷ்ணா. contact@inaikkural.com